இந்தியா

மக்களை ஏமாற்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்பது உறுதி.. லாலு பிரசாத் திட்டவட்டம்!

இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தியதால் சாமானிய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களை ஏமாற்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்பது உறுதி.. லாலு பிரசாத் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தியதால் சாமானிய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களை ஏமாற்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்பது உறுதி.. லாலு பிரசாத் திட்டவட்டம்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், "நாட்டின் நிலைமை சரியில்லை. பணவீக்கமும் வேலையின்மையும் உச்சத்தில் உள்ளது. மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வருவதால் சமையல் எரிவாயு விலை குறைத்து மீண்டும் நரேந்திர மோடி மக்களை ஏமாற்றி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தோற்பது உறுதி.

சமீபத்திய நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. மற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வியடையும். இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தியதால் சாமானிய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. இந்த மாநாட்டை நடத்தியதால் அதிக தொகைதான் செலவாகியுள்ளது.

14 பேர் கொண்ட இந்தியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு முதல் கூட்டம் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் கூட்டணியின் உத்திகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்குறித்து விவாதிக்கப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories