இந்தியா

தரதரவென இழுத்து நடுரோட்டில் தாக்கப்பட்ட இளைஞர்.. 8 சிறார்கள் வெறிச்செயல்.. வீடியோவால் பகீர் !

18 வயது இளைஞரை நடு ரோட்டில் தரதரவென கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரதரவென இழுத்து நடுரோட்டில் தாக்கப்பட்ட இளைஞர்.. 8 சிறார்கள் வெறிச்செயல்.. வீடியோவால் பகீர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெற்கு டெல்லியில் அமைந்துள்ளது சங்கம் விஹார் என்ற பகுதி. இங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்துள்ளது. அப்போது அவருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் அந்த இளைஞரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அவரை தாக்கவும் தொடங்கியுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை சந்து பகுதிக்கு ரோட்டில் தரதரவென இழுத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அந்த இளைஞரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளனர்.

தரதரவென இழுத்து நடுரோட்டில் தாக்கப்பட்ட இளைஞர்.. 8 சிறார்கள் வெறிச்செயல்.. வீடியோவால் பகீர் !

இந்த கொடூர தாக்குதலில் அந்த இளைஞரின் முகம், வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு வீடியோவும் எடுத்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு கூடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் அந்த இளைஞரும் கடும் காயத்தோடு சென்றுவிட்டார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து விசாரிக்கையில், அவர்கள் அனைவரும் மைனர் என்று தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு முதலே அவர்களுக்கும், அந்த இளைஞருக்கு முன் பகை இருந்து வந்துள்ளதும், இதனாலே அவரை அந்த கும்பல் தாக்கியதும் தெரியவந்தது.

தொடர்ந்து இந்த தாக்குதலுக்கான முழு காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் 18 வயது இளைஞரை நடு ரோட்டில் தரதரவென கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories