இந்தியா

ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சி: மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்.. இந்தியா முழுவதும் CPIM போராட்டம் !

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், வேலையின்மைய கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிண்டி ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சி: மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்.. இந்தியா முழுவதும் CPIM போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், வேலையின்மைய கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிண்டி ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அரிசி, பருப்பு, எண்ணெய், பால், சர்க்கரை உள்ளிட்டவை 10 ஆண்டுகளில் இருமடங்கு விலையேறி உள்ளதை பட்டியலிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக தெரிவித்த பாஜக 10 ஆண்டுகளில் 20 கோடிப் பேருக்கு வேலை கொடுத்ததா? அந்த பட்டியல் எங்கே எனவும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சி: மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்.. இந்தியா முழுவதும் CPIM போராட்டம் !

போராட்டம் துவங்கும் முன் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “மோடி அரசின் கீழ் விலைவாசி விஷம் போல் ஏறியுள்ளது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என கூறினர். ஆனால், வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடுகின்றனர்.

ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சி: மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்.. இந்தியா முழுவதும் CPIM போராட்டம் !

இவைகளை கண்டித்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் சார்பில் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துகிறோம். விலைவாசி, வேலையின்மை உள்ளிட்ட அனைத்தையும் திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஒன்றிய அரசு பேசுவதாக சாடினார்.

ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சி: மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்.. இந்தியா முழுவதும் CPIM போராட்டம் !

மோடி அரசு மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது. உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார். தொடர்ந்து தண்டவாளத்தில் இறங்கி நின்று ரயில் முன் மறித்து போராட்டம் நடத்தினர். அதன்பின் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories