இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல்.. 5 ஆண்டுகளுக்கு 'கோல்ப்' விளையாடலாம்: கிண்டலடித்த முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி

ஒரே தேர்தல் நடத்திவிட்டு தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ‘‘கோல்ப்’’ விளையாடலாம் என ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி குரேஷி கிண்டலடித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. 5 ஆண்டுகளுக்கு 'கோல்ப்' விளையாடலாம்: கிண்டலடித்த 
முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்ற பேச்சு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சில நன்மைகள் மற்றும் சில தீமைகள் உள்ளன. அடிக்கடி தேர்தல் நடத்துவதால் பெரும் செலவு ஏற்படுவ தாகவும், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. அது ஏழைகளின் பண்டிகையாகும், ஏனெனில் வாக்கு மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே சக்தி” என்று குரேஷி கூறியிருக்கிறார்.

“இன்று ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று சொல்பவர்கள், நாளை ‘ஒரே நாடு, ஒரே அரசியல் கட்சி ஏன் கூடாது?’ என்று கேட்கலாம். பிறகு, ‘ஒரே கட்சி, ஒரே தலைவர்’ஏன் இருக்கக்கூடாது? என்றும் சொல்லலாம்; அவ்வாறு கிளம்பினால் அதற்கு முடிவே இல்லை.

நாட்டின் பெயரால் நீங்கள் (பா.ஜ.க. ஆட்சியாளர்கள்) பரப்பும் இந்த தேசியவாதம் எங்கே போய் முடியும்.. அதை எப்படி அடைவீர்கள்?” என்றும் குரோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. 5 ஆண்டுகளுக்கு 'கோல்ப்' விளையாடலாம்: கிண்டலடித்த 
முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி
Hansraj

“இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு மற்றும் மாநிலங்களின் ஒன்றியம் என்ப தால், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டம் அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமில்லை” என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, “நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டுமானால், சில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டும், மேலும் சில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டும்” என்று தெரிவிக்கும் அவர், “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர்கள் கோல்ப் விளையாடலாம்..

“தேர்தல் ஆணையத்தைப் பொறுத்த வரை, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது மிகவும் எளிதானது, ஏனெனில் இந்த செயல்பாட்டில் ஒரு முறை மட்டுமே வாக்குப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதே வாக்காளர், அதே வாக்குச் சாவடி மற்றும் மாவட்டத்தின் அமைப்பும் ஒரே மாதிரியாகவே இருக்கப் போகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தனித்தனியாக செய்யப்பட வேண்டியதில்லை.

எனவே, இது தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் எளிமையான வேலையாக இருக்­கும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் 5 ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்திவிட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோல்ப் விளையாடலாம்” என்று கிண்டலாக குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories