இந்தியா

”நாடாளுமன்றத்தில் அனைத்து அமைச்சர்களும் இந்தியில் பேச வேண்டும்”.. மீண்டும் இந்தியை திணிக்கும் அமித்ஷா!

நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்தி மொழியில் பேசுவது போல் அனைத்து அமைச்சர்களும் இந்தியில் பேச வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”நாடாளுமன்றத்தில் அனைத்து அமைச்சர்களும் இந்தியில் பேச வேண்டும்”.. மீண்டும் இந்தியை திணிக்கும் அமித்ஷா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கப் பார்கிறது.

”நாடாளுமன்றத்தில் அனைத்து அமைச்சர்களும் இந்தியில் பேச வேண்டும்”.. மீண்டும் இந்தியை திணிக்கும் அமித்ஷா!

அண்மையில் கூட எவ்வித எதிர்ப்பும் இன்றி அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் இந்தியைத் திணிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்தியில் பேசுவது போல் அனைத்து அமைச்சர்களும் இந்தியிலேயே பேச வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி குழு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிகுழு தன மூன்றாவது அறிக்கையைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. இதற்காக நடந்த கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, " நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டும் பேசுவது போல் மற்ற அமைச்சர்களும் பிரதமரைப் பின்பற்றி இந்தியிலேயே பேச வேண்டும் "என்று வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories