இந்தியா

அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை நிர்வாணமாக கிராமம் முழுவதும் இழுத்துச் சென்ற கொடூர கணவன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை அவரது கணவரே நிர்வாணமாகக் கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழத்துச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை நிர்வாணமாக கிராமம் முழுவதும் இழுத்துச் சென்ற கொடூர கணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ப்ரடாப் கார்க் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை நிர்வாணமாக அடித்து ஊர்வலமாக இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த வீடியோ குறித்து ராஜஸ்தான் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றது அவரது கணவரும் குடும்பத்தினரும் தான் என்ற தகவல் போலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், தம்பதிகளுக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அப்போதிலிருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து கணவர் மற்றும் அவரது மாமியா மாமனார் என அனைவரும் சேர்ந்தே அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கணவர், மாமியார், மாமனார் ஆகிய மூன்று வேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரே தனது மனைவியை நிர்வாணமாகக் கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories