இந்தியா

சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அண்மையில் 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் கடந்த 23ம் தேதி மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்டது. இந்த சாதனையைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ அமைப்பு சூரியனை ஆய்வு செய்ய குறிவைத்துள்ளது.

அதன்படி சூரியனை குறித்து ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ நீண்ட நாள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து 'ஆதித்யா எல் 1' (ADITYA - L1) என்று பெயரிட்டுள்ள விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது. அதன்படி இந்த விண்கலம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 (PSLV-C57) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

இதற்கான 'கவுண்ட்டவுன்' செப்டெம்பர் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் 'ஆதித்யா- எல்1' விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, "'ஆதித்யா- எல்1' விண்கலமானது சூரியனின் வெளிமட்டப் பகுதியான ‘சோலார் கொரோனா’ எனப்படும் சூரியனைச் சுற்றியுள்ள மண்டலத்தில் நிகழும் இயற்பியல் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இந்தியா அனுப்பவிருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் எல்1 என்ற புள்ளியில் இருந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

7 கருவிகளைச் சுமந்து செல்லும் இந்த விண்கலம் சூரியனின் சுற்றுப்புறத்தில் இருக்கும் மின்காந்த மற்றும் அணுத்துகள் புலங்களை ஆய்வு செய்யும். மேலும் இந்த கருவிகள் 'கரோனல்' வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களையும் வழங்கும்.

4 'ரிமோட் சென்சிங்' கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும். இதில் புலப்படும், புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்களும் அடங்கும். சூரிய கொரோனாவை படம் பிடித்து அதன் இயக்கவியலையும் ஆய்வு செய்யும்.

சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

அதுமட்டுமின்றி இதில் பொருத்தப்பட்டுள்ள 'சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்' என்ற கருவி சூரியனில் இருந்து மென்மையான எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 'ஹை எனர்ஜி எல்-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்' கருவி சூரியனில் இருந்து கடின எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும்.

'சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்', ஒளிக்கோளம் மற்றும் 'குரோமோஸ்பியரை' குறுகிய மற்றும் அகன்ற அலைவரிசையில் உள்ள புற ஊதா அலை நீளங்களில் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. விண்கலத்தில் உள்ள பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு கருவி சூரியக்காற்றின் பிளாஸ்மா பண்புகளை அளவிட இருக்கிறது. மேம்பட்ட 'டிரை- ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல்' காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது. மேம்பட்ட 'டிரை- ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல்' காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது.

banner

Related Stories

Related Stories