இந்தியா

”பொய் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியை இளைஞர்கள் தூக்கி எறிவார்கள்".. மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என பொய் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியை இளைஞர்கள் தூக்கி எறிவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

”பொய் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியை இளைஞர்கள் தூக்கி எறிவார்கள்".. மல்லிகார்ஜூன கார்கே உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

குறிப்பாக ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைகள் வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க தற்போது அதை மறந்தே விட்டது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகப் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.கவை 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் விரட்டியடிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”பொய் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியை இளைஞர்கள் தூக்கி எறிவார்கள்".. மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

இது குறித்து ர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூக வலை தளப்பதிவில், "ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, சில ஆயிரம் பேருக்குத் தவணை முறையில் வேலைகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி வழங்கும் அரசுப் பணிகளில், ஏற்கனவே ஒன்றிய அரசுப் பணிகளில் பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர்கள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 15 பேருக்கு புதிய நியமனங்களை வழங்கிவிட்டு 21 பேருக்குப் பதவி உயர்வு அளித்துள்ளது.

”பொய் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியை இளைஞர்கள் தூக்கி எறிவார்கள்".. மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

இதேபோன்று, மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தில் 38 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பணி நியமன கடிதங்களில், 18 பதவி உயர்வுகளும் அடங்கும். நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கடுகளவு கூட அக்கறை இல்லாத பிரதமர் மோடி, அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகிறார். பா.ஜ.கவின் பொய் வாக்குறுதிகள், ஏமாற்று வேலைகளைக் கண்டு இளைஞர்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வை தூக்கி எறிவார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories