இந்தியா

தங்கைக்காக நடந்த கொலை.. காட்டிக்கொடுப்பான் என அஞ்சி நண்பனையும் கொன்ற கொடூரம்.. மும்பையில் அதிர்ச்சி !

மும்பையில் தங்கைக்கு தொல்லை கொடுத்தவரும் அவரின் நண்பரும் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கைக்காக நடந்த கொலை.. காட்டிக்கொடுப்பான் என அஞ்சி நண்பனையும் கொன்ற கொடூரம்.. மும்பையில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஸ்டிர தலைநகரான மும்பை அருகில் கசரா மலைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட நிலையில், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியபோது இருவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்தது.

இந்த சூழலில் கொலை செய்யப்பட்டவரின் சட்டை பையில் பொலேரோ கார் ஒன்றின் சாவி இருந்தது. அந்த சாவியை வைத்து அதன் உரிமையாளரை போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி மகாராஷ்டிரா மாநிலம், லோனி என்ற இடத்தைச் சேர்ந்த சாஹில் பதான் என்பவரின் கார் என்பது தெரியவந்தது.

அதன்பின்னர் அவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவரும் அவரின் நண்பர் சுபியான் என்பவரும் சில நாட்கள் காணாமல் போனதாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வந்த அழைப்புகள் அடிப்படையில் குணால் பிரகாஷ், மனோஜ், பிரசாந்த், பெரோஸ் பதான் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

தங்கைக்காக நடந்த கொலை.. காட்டிக்கொடுப்பான் என அஞ்சி நண்பனையும் கொன்ற கொடூரம்.. மும்பையில் அதிர்ச்சி !

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களில் ஒருவரின் தங்கைக்கு சாஹில் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனால் அவரை தனியே ஒரு இடத்துக்கு வரச்சொல்லி, அவரையும், அவர் கூடவந்த சுபியானையும் கொலை செய்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய போலிஸார், கொலையில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய பெண் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், தலைமறைவாக இருக்கும் அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories