இந்தியா

”லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கவில்லை என பொய் சொல்லும் மோடி அரசு”.. ராகுல் காந்தி பதிலடி!

லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கப்படவில்லை என மோடி அரசு பொய் சொல்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கவில்லை என பொய்  சொல்லும் மோடி அரசு”.. ராகுல் காந்தி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 8 நாள் பயணமாக லடாக்கிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி லடாக். அந்த லடாக்கில் இருந்து சில பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இதை இங்கிருக்கும் ஒவ்வொருவரும் கூறுகின்றனர். ஆனால் இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு அங்குலம் நிலம் கூட எடுக்கவில்லை என்று மோடி அரசு பொய் சொல்கிறது.

இங்கு உள்ள மக்கள் முன்பு மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலத்திற்கு இப்போது செல்ல முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதிலிருந்தே மோடி அரசு பொய் சொல்வது தெளிவாகத் தெரிகிறது.

நான் பல தொழிலாளர்களிடம் பேசினேன். இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் தங்கியிருப்பதாக என்னிடம் சொன்னார்கள். காங்கிரஸின் சித்தாந்தம் லடாக்கின் இரத்தத்திலும் டிஎன்ஏவிலும் உள்ளது. பா.ஜ.க லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது. நாங்கள் லடாக் மக்களுடன் நிற்கிறோம். அவர்கள் உரிமைகளைப் பெற முழு ஆதரவை நாங்கள் தருகிறோம்.

இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்பி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அமைதியை நல்லிணக்கத்தைப் பரப்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories