சினிமா

'கடைசி விவசாயி' படத்துக்கும், தாத்தாவுக்கும் தேசிய விருது.. தமிழில் தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன ?

'கடைசி விவசாயி' படத்துக்கு 2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'கடைசி விவசாயி' படத்துக்கும், தாத்தாவுக்கும் தேசிய விருது.. தமிழில் தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் திரைப்படமானது தேசிய திரைப்பட விழாவில் பொதுமக்களுக்காக திரையிடப்பட்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக அபர்ணாவுக்கும், சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷுக்கும், திரைக்கதை எழுதிய சுதா கொங்கராவுக்கும் அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில் 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு, "சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, படம்" என 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

'கடைசி விவசாயி' படத்துக்கும், தாத்தாவுக்கும் தேசிய விருது.. தமிழில் தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன ?

கடைசி விவசாயி - சிறந்த திரைப்படம்.

இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு 2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த 'கடைசி விவசாயி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விவசாயத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எல்லாம் தனித்துவமாக அமைந்துள்ளது இந்தப் படம். விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என போராடும் ஒரு விவசாயியின் வாழ்வியலே இந்தப் படத்தின் மையக் கதை.

'கடைசி விவசாயி' படத்துக்கும், தாத்தாவுக்கும் தேசிய விருது.. தமிழில் தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன ?

ஸ்ரீ நல்லாண்டிக்கு சிறப்பு விருது!

இந்த மையக் கதைக்கு வலு சேத்திருக்கும் படத்தில் நடித்த மறைந்த ஸ்ரீ நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி படம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றியிருந்த நிலையில் தேசிய விருது சிறந்த அங்கீகாரம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சிற்பிகளின் சிற்பங்கள் - சிறந்த கல்வி திரைப்படம்

அதேபோல் தமிழில் 2021ம் ஆண்டுக்கான சிறப்பு விருது பட்டியலில் இருந்த சிறந்த கல்வி திரைப்படத்துக்கான பிரிவில் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்தின் இயக்குநர் பி.லெனினுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரேயா கோஷல் - சிறந்த பின்னணி பாடகர்

2021ம் ஆண்டு, சிறந்த பின்னணி பாடகர் பெண் பிரிவில், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்க்கு சிறப்பு விருது!

2021ம் ஆண்டுக்கான, குறும்படங்களுக்கான சிறப்பு பிரிவில் ’கருவறை’ படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

banner

Related Stories

Related Stories