இந்தியா

தனியே இருக்கும்போது சிக்கிய காதல் ஜோடிகள்.. கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கிராமமக்கள் !

காதல் ஜோடிகளை ஊர் மக்கள் கம்பத்தில் வைத்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியே இருக்கும்போது சிக்கிய காதல் ஜோடிகள்..  கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கிராமமக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதியில் கணவன் மனைவி தங்களது இரு குழந்தைகளோடு வசித்து வந்துள்ளனர். இதில் கணவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

மனைவிக்கு தெரியாமல் அந்த நபர் அந்த பெண்ணை ரகசியமாக சந்தித்து பேசிவந்துள்ளார். மேலும், அந்த பெண் தனியே இருக்கும் போது அவரின் வீட்டுக்கும் அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டுக்கு உள்ளே சென்றபோது வீட்டிற்குள் வைத்தே இருவரையும் சிறை பிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து இருவரையும் வெளியே பிடித்து இழுத்துவந்து அவர்கள், அங்கிருந்த கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். அதோடு அந்த நபரின் மனைவிக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவரும் பஞ்சாயத்துக்கு வந்துள்ளார்.

தனியே இருக்கும்போது சிக்கிய காதல் ஜோடிகள்..  கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கிராமமக்கள் !

அதன்படி பஞ்சாயத்தில் இருவருக்கும் அடிகொடுக்குமாறு கூற அதன்படி கம்பத்தில் கட்டிவைத்து இருவரையும் அடித்துத்துவைத்துள்ளனர். இது குறித்து அங்கிருந்த சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் தாக்கப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து யாரும் புகார் தரவில்லை என்பதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் போலிஸார் திணறி வருகின்றனர். இதனிடையே இது குறித்து வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories