இந்தியா

இந்து பெண்ணுடன் பேசிய இஸ்லாமிய இளைஞர்.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தோடு கொடூரமாக தாக்கிய இந்துத்துவ கும்பல் !

இந்து பெண்ணுடன் பேசிய இஸ்லாமிய இளைஞர்.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தோடு கொடூரமாக தாக்கிய இந்துத்துவ கும்பல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாட்டுக்கறி எடுத்து செல்பவர்களை தாக்கி கொலை செய்வது,அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போட சொல்லி தாக்குவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் இப்போதும் அரங்கேறி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா இரயில் நிலையத்தில் 16 வயது இளைஞர் ஒருவர் அவர் வயது பெண்ணுடன் பேசி கொண்டிருந்தார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அந்த இளைஞர் ஒரு இந்து சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் பேசுவதை கண்ட கும்பல் அவரை பிடித்து விசாரித்தனர்.

இந்து பெண்ணுடன் பேசிய இஸ்லாமிய இளைஞர்.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தோடு கொடூரமாக தாக்கிய இந்துத்துவ கும்பல் !

தொடர்ந்து அவரை தாக்கினர். சரமாரியாக தாக்க தொடங்கியதில் அந்த பெண் அவரை அடிக்க வேண்டாம் என அழுதுகொண்டே கெஞ்சினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை தாக்கியுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இரயில்வே காவல்துறையினரை மிரட்டி தள்ளிவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு அந்த இஸ்லாமிய நபரை இழுத்து சென்றனர்.

மேலும் தாங்கள் ஒரு இந்து பெண்ணை காப்பாற்றியுள்ளோம் என்று கூறி விட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி இருக்கும் மகாராஷ்டிராவில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது தற்போது கண்டங்களை எழுப்பி வருகிறது.அதோடு இதுகுறித்து காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார்கள் குவிந்துள்ளது.

banner

Related Stories

Related Stories