இந்தியா

”2024-ல் நாட்டு மக்களால் பா.ஜ.க தூக்கி எறியப்படும்”.. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் நம்பிக்கை!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்துவோம் என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

”2024-ல் நாட்டு மக்களால் பா.ஜ.க தூக்கி எறியப்படும்”.. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னுடைய 61 வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், "இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஓராண்டாகச் சனாதன சக்திகளைத் தனிமைப் படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என அரை கூவல் விடுத்தோம். தமிழ்நாடு முழுவதும் வி.சி.க சார்பில் இந்த கருத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

”2024-ல் நாட்டு மக்களால் பா.ஜ.க தூக்கி எறியப்படும்”.. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் நம்பிக்கை!

இன்று அகில இந்தியா அளவில் பா.ஜ.க தனிமைப்பட்டு நிற்கிறது. 26 கட்சிகள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் விசிகவும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதுவும் பெரும்பான்மை இந்து மக்களாலேயே பா.ஜ.க ஆட்சி தூக்கி எறியப்பட,டு நாடும் மக்களும் அரசமைப்பு சட்டமும் பாதுகாக்கப்படும்

இந்த கருத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் என் மணி விழா நிறைவு மாநாடு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சிராப்பள்ளியில் "வெல்லும் ஜனநாயகம்" என்ற பெயரில் நடத்த உள்ளோம். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தேசிய தலைவர்கள், கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories