இந்தியா

பிரபல நடிகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

பட்டியலின சமூகத்தினருக்கு எதிராகச் சர்ச்சை கருத்தைப் பேசிய பிரபல நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..  நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகர் உபேந்திரா. இவர் சூப்பர் ஸ்டார், குடும்பம், காட்பாதர், ஐ லவ் யூ, கப்ஜா உள்ளிட்ட பல கன்னட படங்களில் நடித்துப் பிரபலமானவர். தமிழிலும் விஷாலின் சத்யம் படத்தில் காவல்துறை வேடத்தில் நடித்திருப்பார்.

பின்னர் 2017ம் ஆண்டு பிரஜாகியா என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி பிரஜாகியா கட்சியின் ஆறாவது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

பிரபல நடிகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..  நடந்தது என்ன?

இதையொட்டி சமூகவலைத்தளத்தில் நேரலையில் உபேந்திரா பேசினார். அப்போது பட்டியலின சமூகத்திற்கு எதிராகச் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார். இவரின் இக்கருத்து மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பலரும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories