இந்தியா

’இளைஞர்களே கையில் துப்பாக்கி எடுங்க’.. ஹரியானாவில் காவல்துறை முன்பே வன்முறையை தூண்டும் RSS கும்பல்!

ஹரியானா காவல்துறை முன்பே வன்முறையைத் தூண்டும் வகையில் ஆச்சார்யா ஆசாத் சிங் ஆர்யா என்பவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’இளைஞர்களே கையில் துப்பாக்கி எடுங்க’.. ஹரியானாவில் காவல்துறை முன்பே வன்முறையை தூண்டும் RSS கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலும் வன்முறை வெடித்துள்ளது. இந்த மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான் நடந்து வருகிறது. ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும், அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பேரணியை ஜூலை 31 அன்று நடத்தினர்.

இந்த பேரணியில் வந்தவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புக் கோஷங்களை எழுப்பியபடியே சென்றுள்ளனர். இவர்களது பேரணி குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில் வந்தபோது, சிலர் தடுத்துள்ளனர். இதையே தங்களுக்குக் கிடைத்த கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உடனடியாக மத வன்முறையில் இறங்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மக்களை அடித்து துன்புறுத்தியதோடு வாகனங்கள், கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளனர். மேலும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 2 ஊர்காவல் படையினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதில் மசூதியில் இருந்த இமாம் ஒருவரும் இந்துத்துவ கும்பலால் கொல்லப்பட்டார். அதோடு 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்ந்து ஒரு சில பகுதிகளுக்கு பரவ தொடங்கவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அங்கே இருக்கும் பாஜக அரசு கலவரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை உ.பி அரசை போன்று புல்டோசர் வைத்து இடித்து வருகிறது.

இந்நிலையில் போலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பாண்டிரி என்ற கிராமத்தில் மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில் மீண்டும் வி.ஹெச். பியின் பிரஜ் மண்டல் யாத்திரையை மீண்டும் தொடங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

’இளைஞர்களே கையில் துப்பாக்கி எடுங்க’.. ஹரியானாவில் காவல்துறை முன்பே வன்முறையை தூண்டும் RSS கும்பல்!

இக்கூட்டத்தில் பேசிய ஹரியானாவைச் சேர்ந்த கௌ ரக்ஷக் தளத்தின் மூத்த நிர்வாகி ஆச்சார்யா ஆசாத் சிங் ஆர்யா என்பவர் இளைஞர்கள் மத்தியில் வன்முறையை விதைக்கும் வகையில் போலிஸார் முன்பு ஆயுதங்களை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.

அவர், ”மோவட் இந்துக்களும், அருகே உள்ள கிராமத்தினரும் ரைபிள் துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காவல்துறையின் வழக்கிற்கு இளைஞர்கள் பயப்படக் கூடாது. என் மீதும் எப்.ஐ.ஆர் இருக்க” என பேசியுள்ளார். இவர் பேசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஹரியானா காவல்துறை முன்பே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஆச்சார்யா ஆசாத் சிங் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories