இந்தியா

“மேலிடம் வரை லிங் இருக்கு..” : வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி - ஸ்ரீநகரில் சிக்கிய தம்பதி !

ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த மன்மோகன் கஞ்சூ என்பவர் தான் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி பல லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மேலிடம் வரை லிங் இருக்கு..” : வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி - ஸ்ரீநகரில் சிக்கிய தம்பதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரண் ஜோ படேல். இவர் தன்னை பிரதமர் அலுவலத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகக் கூறி, காஷ்மீரில் இசட் ப்ளஸ் பாதுகாப்புடன் உலா வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைப்போன்றே தற்போது, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த மன்மோகன் கஞ்சூ என்பவர் தான் ஐ.பி.எஸ் அதிகாரி என்றும் தனது மனைவி ஆயுஷ் கவுல் கஞ்சூ ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் சிலரிடம் அறிமுகம் ஆகியுள்ளனர். மேலும் பிரதமர் அலுவகம் வரை தங்களுக்கு லிங் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பின்னர் அறிமுகமான நபர்களிடமிருந்து, ஆசையாய் பேசி பணத்தை மோசடி செய்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அரசு அதிகாரிகளுக்கு பணிமாறுதல் பெற்றுவதாகவும் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலிஸார், அவர்களிடமிருந்து பல போலி இடமாற்றம் மற்றும் பணி நியமன ஆணைகள், லேப்டாப், செல்போன், போலி ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் மன்மோகன் கஞ்சூ சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் தற்போது வரை மூன்று பேர் புகார் அளித்துள்ள நிலையில் மேலும் சிலர் புகராளிக்க இருக்கலாம் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories