இந்தியா

நடுரோட்டில் வாக்குவாதம்.. இளைஞர் மீது துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA மகன்.. ம.பி.யில் தொடரும் சோகம் !

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் வாக்குவாதம்.. இளைஞர் மீது துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA மகன்.. ம.பி.யில் தொடரும் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பழங்குடி சமூகத்தவர் மீது பாஜகவை சேர்ந்தவர் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாநில அரசு பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறது.

இந்த நிலையில், அங்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏவின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்ராலி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாஜகவை சேர்ந்த ராம் லல்லு வைஷ்யா என்பவர் இருந்து வருகிறார்.

நடுரோட்டில் வாக்குவாதம்.. இளைஞர் மீது துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA மகன்.. ம.பி.யில் தொடரும் சோகம் !

இவருக்கு விவேகானந்த் வைஷ்யா என்ற மகன் இருந்துள்ளார். இவரின் பாஜகவில் இணைந்து அங்கு கட்சியில் பொறுப்பை வகித்து வருகிறார். இவர் வெளியில் சென்றபோது அங்கு இவருக்கும் 34 வயது நபரரான குமார் கைர்வார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த நபரை சுட்டுள்ளார். இதில் அந்த நபரின் கையில் குண்டு பாய்ந்ததால் அவர் அலறி துடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பாஜக எம்.எல்.ஏவின் மகன் விவேகானந்த் வைஷ்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories