இந்தியா

கர்நாடகத்தை அடுத்து மும்பை: பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு.. அதிர்ச்சியளித்த கல்லூரி நிர்வாகம்!

மும்பையில் பர்தா அணிந்த மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் சர்ச்சை வெளிவந்துள்ளது.

கர்நாடகத்தை அடுத்து மும்பை: பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு.. அதிர்ச்சியளித்த கல்லூரி நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

பசு இறைச்சி வைத்துள்ளதாக பொதுமக்கள் அடித்து கொள்வதும், காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதும் என நாட்டில் மதவாத வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் பாஜக ஆளும் கர்நாடகாவில் கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதும் அதற்கு ஆதரவாக பாஜக ஆதரவு அமைப்புகள் கலவரம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது மும்பையில் பர்தா அணிந்த மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் சர்ச்சை வெளிவந்துள்ளது.

கர்நாடகத்தை அடுத்து மும்பை: பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு.. அதிர்ச்சியளித்த கல்லூரி நிர்வாகம்!

மும்பை செம்பூரியில் ஆசாரியா கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு சென்றுவந்த நிலையில், அங்கு கல்லூரி நிர்வாகம், மாணவிகளுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறது. அதன்படி பர்தா அணிந்த மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மாணவிகளுக்கு இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், பர்தா அணிந்த மாணவிகள் கல்லூரிக்கு வந்தபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிற்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு இடங்களில் மத சர்ச்சை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories