இந்தியா

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 35 வயது வாலிபரை அடித்துக் கொன்ற தந்தை : ஒடிசாவில் பகீர்!

ஒடிசாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைத் தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 35 வயது வாலிபரை அடித்துக் கொன்ற தந்தை : ஒடிசாவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்திற்குட்பட்ட புல்பானியில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் கட்டடவேலைகள் நடந்துள்ளது. இங்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது நபர் கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்குவதற்காக வந்துள்ளார்.

இவர் கட்டடவேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 35 வயது வாலிபரை அடித்துக் கொன்ற தந்தை : ஒடிசாவில் பகீர்!

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா இருவரும் குற்றவாளியைத் தடிகளால் அடித்து கொலை செய்துள்ளது. பின்னர் இருவரும் காவல்நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளனர்.

பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories