இந்தியா

”புல்வாமா போன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதையும் செய்வார் பிரதமர் மோடி” : சத்யபால் மாலிக் எச்சரிக்கை!

நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யத் தயங்கமாட்டார் என புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிட்டு சத்யபால் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”புல்வாமா போன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதையும் செய்வார் பிரதமர் மோடி” : சத்யபால் மாலிக்  எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் இந்த முறை எப்படியும் பா.ஜ.கவை வீழ்திவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டு தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பா.ஜ.கவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தியா என்ற பெயரைப் பார்த்து பா.ஜ.க பதற்றமடைந்து கூட்டணி கட்சியை விமர்சித்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டது.

”புல்வாமா போன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதையும் செய்வார் பிரதமர் மோடி” : சத்யபால் மாலிக்  எச்சரிக்கை!

இந்நிலையில் தேர்தலுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யத் தயங்க மாட்டார் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நியூஸ்கிளிக் தளத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், "2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற மோடி எதைச் செய்யவும் தயங்க மாட்டார். தேர்தல் வெற்றிக்காகத் தீவிர நடவடிக்கைகளிலும் அவர் இறங்குவார். அல்லது தேர்தலில் பலன் அடைய, திட்டமிட்டு ஏதேனும் ஒரு பிரச்சினையை உருவாக்குவார் என்றும் அஞ்சுகிறேன். மோடியின் இந்த இயல்புக்கு புல்வாமா தாக்குதல் உதாரணம்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”புல்வாமா போன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதையும் செய்வார் பிரதமர் மோடி” : சத்யபால் மாலிக்  எச்சரிக்கை!

2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது அங்கு ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு பிரதமர் மோடி தன்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து அதிகம் பேசவேண்டாம் என அறிவுறுத்தினார் என்று பேட்டி ஒன்று சத்யபால் மாலிக் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories