இந்தியா

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

இன்று சர்வதேச புலிகள் தினம் குறித்து சிறப்பு செய்தி பின்வருமாரு:-

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று சர்வதேச புலிகள் தினம். உலகம் முழுவதும் உள்ள நாடுகள் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கில், புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக, புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாகவும், உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன. ஒரு நாட்டின் மிக முக்கிய பொருளாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக புலிகள் இருந்து கொண்டிருக்கிறது.

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

அதுமட்டுமல்ல்லாது. பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் வனப்பகுதிகளும் இயற்கை வளங்களும் பாதுகாக்கக் கூடிய மிகப்பெரிய அம்சமாக வனப்பகுதிகளில் புலிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு, புலிகள் காடுகளில் இருந்தால் மட்டுமே அந்த காடுகள் வளமிக்க காடுகளாக இருக்க முடியும் என்பதையும், நீடித்த பொருளாதாரத்தைக் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வது புலிதான் என்பது குறித்து விளிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

கடந்த 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலக அளவில் இந்தியாவில் 75% புலிகள் இருப்பதாகவும் , சராசரியாக 2950 புலிகள் இந்தியாவில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி தெரிய வருகிறது. புலிகள் வாழும் வனப்பகுதி, பாதுகாப்பான வனப்பகுதியாக இருக்கும்.

அவ்வாறு பாதுகாப்பாகவும் வளமிக்க வனப்பகுதியாக புலிகள் வாழும் வனப்பகுதியில் ஒரு மனிதனுக்கு அன்றாட தேவையான நீர், காற்று, மனிதனின் மரபு வகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதை அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில், புலிகள் பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வளம்மிக்க சூழ்நிலையை தற்போது காண முடிகிறது.

குறிப்பாக, முக்குருத்தி தேசிய பூங்காவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டம் உள்ளிட்ட அனைத்துப் வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

இதனைப் பார்க்கும்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகள் மீண்டும் வளமிக்க பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

இந்த சூழ்நிலையில் புலிகளின் வாழ்விடம் குறைந்து கொண்டு செல்லும் நிலையில், தமிழகத்திலுள்ள வனப் பகுதியை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திலுள்ள 23% பரப்பளவு கொண்ட வனப்பகுதியை 33% வனப்பகுதியாக அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மக்களின் உணவு, உணவு உற்பத்தி, தண்ணீர், காற்று போன்ற அனைத்து தேவைகளுக்கும் வனங்கள் தேவை அதை பாதுகாக்கும் பணியை புலிகள் மேற்கொண்டு வருவதாகவும் , அந்த மகத்தான பணியை மேற்கொள்ளும் புலிகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும். தமிழகத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உட்பட அனைத்து புலிகள் காப்பகங்கள் உட்பட வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உலகப் புலிகள் நாளில், சிறப்புமிகு உயிரினமான நம் புலிகளின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுப்போம்! அருகிவரும் உயிரினமான புலிகளைக் காப்பதற்கான தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சிகள் மிகச்சிறந்த முடிவுகளை அளித்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-இல் 306 ஆக உயர்ந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து கானகத்தில் புலிகளின் இடத்தைப் பேணிக் காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories