இந்தியா

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூர செயலில் ஈடுபட்ட கோவில் பணியாளர்கள்.. ம.பியில் அதிர்ச்சி !

மத்தியப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூர செயலில் ஈடுபட்ட கோவில் பணியாளர்கள்.. ம.பியில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாட்னா மாவட்டத்தை அடுத்துள்ள மைஹார் நகரில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள கோவில் ஒன்றில் வேலைபார்த்த ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா ஆகியோர் பார்த்து, சிறுமியை தனியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்..

அங்கு வைத்து இருவரும் அந்த சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து அங்கேயே விட்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கு வந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட போலிஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், கோவிலில் வேலை செய்யும், ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா ஆகியோரே இந்த கொடூர செயலால் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமி மோசமான காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூர செயலில் ஈடுபட்ட கோவில் பணியாளர்கள்.. ம.பியில் அதிர்ச்சி !

மேலும், குற்றவாளிகள் அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடினமான பொருளைச் செருகியதாகவும், எனினும் மருத்துவ அறிக்கை வந்த பின்னரே இது குறித்த உண்மை நிலை தெரியவரும் என்றும் போலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்கு ஆளும் பாஜக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதோடு இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கோவில் நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாகவும், அவர்கள் கோவிலின் பெயருக்கு தீங்கு இழைத்து விட்டனர் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories