இந்தியா

மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!

இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அனுமதி கொடுத்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 90 நாட்களுக்கு மேலாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!

இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு நாளும் மணிப்பூர் கொடூரம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் இந்தியா கூட்டணி பெயரை விமர்சித்து வருகிறார்.

மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!

இதனால் அவையில் மோடி பேசியே தீரவேண்டும் என முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அசாம் மாநில காங்கிரஸ் MP கௌரவ் கோகோய் தாக்கல் செய்தார்.

இதையடுத்து "இந்தியா" கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அனுமதி கொடுத்துள்ளார். அதோடு, அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதித்து நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது விவாதம் என்பது பின்னர் அறிவிக்கப்பட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories