இந்தியா

மாறுவேடத்தில் தலைமறைவு; சினிமா பாணியில் தேடுதல் வேட்டை: 18 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி?

18 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி ஒருவரை போலிஸார் கைது செய்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மாறுவேடத்தில் தலைமறைவு; சினிமா பாணியில் தேடுதல் வேட்டை: 18 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹரியானா மாநிலம் ஃபெரோசாபாத் பகுதியைச் சேர்ந்த சின்னி என்கிற குல்விந்தர் சிங் என்ற இளைஞர் கடந்த 2005ம் ஆண்டு, சதர் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது வசூல் பணம் 34 ஆயிரம் ரூபாயை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிவிட்டு தப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சதர் காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குல்விந்தரை தவிர அவரின் கூட்டாளிகளை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் குல்விந்தர் மட்டும் போலிஸிடம் சிக்காமல், அடையாளத்தை மாற்றிக்கொண்டு தப்பி வந்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு குல்விந்தர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்த போலிஸார் மாறுவேடத்தில் அப்பகுதியில் உலாவி வந்தனர்.

மாறுவேடத்தில் தலைமறைவு; சினிமா பாணியில் தேடுதல் வேட்டை: 18 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி?

தொடர்ந்து 6 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு, குல்விந்தரின் சகோதரைக் கண்டுபிடித்து, கூலி தொழிலாளர் எனக் கூறி குல்விந்தரின் செல்போன் நம்பரை போலிஸார் வாங்கியுள்ளனர். மேலும் குல்விந்தர் பயன்படுத்திய செல்போன் நம்பர் ஆள்மாறாட்டம் செய்து வாங்கியது என்பதையும் போலிஸார் கண்டு பிடித்தனர்.

பின்னர் செல்போன் நம்பரை வைத்து ட்ராக் செய்ததில் ஜஜ்ஜார் மாவட்டத்தின் லோஹாரி கிராமத்தில் அவர் வேலை செய்து வந்ததை போலிஸார் கண்டு பிடித்தனர். இதனையடுத்து அவர் பணியாற்றிய உணவகத்திற்கு கன்வார் யாத்ரிகள் போல் போலிஸார் மாறுவேடத்தில் சென்றுள்ளனர்.

அங்கு குல்விந்தரை அடையாளம் கண்ட போலிஸார் அவரிடம் பேச்சுக்கொடுத்து, அவர்தான் குல்விந்தர் சிங் என்பதை உறுதிபடுத்தினர். பின்னர் அங்கிருந்த போலிஸார் குல்விந்தரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து பூண்டிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கண்டுபிடித்த போலிஸாருக்கு ரூ.24 ஆயிரம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories