இந்தியா

உலகின் 4-வது நாடு.. இந்தியாவுக்குப் பெருமை தேடி தரும் 'சந்திரயான் 3' .. நிலவை அடைய 40 நாட்கள் ஏன் ?

'சந்திரயான் 3' விண்கலம் இன்று நிலவுக்கு ஏவப்பட்டுள்ள நிலையில், அது நிலவை அடைய 40 நாட்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் 4-வது நாடு.. இந்தியாவுக்குப் பெருமை தேடி தரும் 'சந்திரயான் 3' .. நிலவை அடைய 40 நாட்கள் ஏன் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய யூனியன் போன்ற விண்வெளி துறையில் ஜாம்பவான்களால் செய்யமுடியாததை இந்தியாவின் குறைந்த செலவு கொண்ட கலன் செய்ததை நாசா அமைப்பே பாராட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது.

அந்த விண்கலம் 2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த கலம் யாரும் பெரிதாக ஆய்வு செய்திடாத நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது.

chandraayan 2
chandraayan 2

இதில் 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது பின்னர் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் இன்று நிலவுக்கு ஏவப்பட்டுள்ள நிலையில், அது நிலவை அடைய 40 நாட்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிற நாடுகளின் விண்கலங்கள் நிலவை அடைய குறைவான காலத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில், 'சந்திரயான் 3' விண்கலம் நிலவை அடைய பல்வேறு அறிவியல் காரணங்களை கணக்கில் கொண்டுள்ளது.

உலகின் 4-வது நாடு.. இந்தியாவுக்குப் பெருமை தேடி தரும் 'சந்திரயான் 3' .. நிலவை அடைய 40 நாட்கள் ஏன் ?

பிற நாடுகள் குறைந்த நாட்களில் நிலவை அடைய முக்கிய காரணமாக அந்த நாடுகள் அதிக எரிபொருளை விண்கலத்தோடு கொண்டுசெல்வது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதோடு, இந்தியா பயன்படுத்தும் ராக்கெட்டும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இஸ்ரோ தற்போது ஜி.எஸ்.எல்.வி எம்கே 3 ராக்கெட்டில்தான் ஏவப்படுகிறது. அந்த வகை ராக்கெட்டில் ஏவப்பட்டுள்ள 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு நேராக செல்வதற்கு பதில், புவியின் நீள்வட்ட பாதையில் படிப்படியாக சுற்றி அதன்மூலம் வேகத்தை அதிகரித்து அதனைப் பயன்படுத்தி அது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்படுகிறது.

பின்னர் விண்கலத்தில் இருக்கும் எரிபொருளின் மூலம் வேகத்தை படிப்படியாகக் குறைத்து நிலவின் தென்பகுதியில் ரோவரை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நிலவில் களத்தை தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories