இந்தியா

"எங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது, ஆனாலும்.. "- மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன ?

"எங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது, ஆனாலும்.. "- மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

"எங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது, ஆனாலும்.. "- மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அங்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி சென்ற சிறுமி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னதாக குக்கி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் சார்பில் மணிப்பூர் நிலைமையைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக தலைமையிலான மாநில அரசு மணிப்பூரில் வன்முறையைத் தூண்டுவதாகவும், வன்முறையில் ஈடுபட்ட ஆயுதக் குழுக்களுக்கு மாநில அரசு ஆதரவளிப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், `மணிப்பூரில் வன்முறையை மேலும் அதிகரிக்க இந்த நீதிமன்றம் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருந்தாலும், மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கை உச்ச நீதிமன்றம் வழிநடத்த முடியாது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் வேலை. எங்களின் அதிகாரத்தில் தெளிவாக இருக்கிறோம். எனவே, ஆக்கபூர்வமான பரிந்துரைகளுடன் வாருங்கள்"எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories