இந்தியா

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. அடுத்தடுத்து தடம்புரண்ட 12 பெட்டிகள் !

மேற்குவங்கத்தின் பாங்குராவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பெட்டிகள் தடம்புரண்டதில் ஓட்டுநர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்.

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. அடுத்தடுத்து தடம்புரண்ட 12 பெட்டிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜூன் 02ம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2-ம் தேதி இரவு நேரத்தில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த ரயில் விபத்து தொடர்பாக செய்திகள் வந்துள்ள நிலையில், இன்று மேற்குவங்கத்தின் பாங்குராவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.

பாங்குரா மாவட்டம் ஓண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயில் மீது, சிகப்பு விளக்கு சிக்னலை கவனிக்காமல் மற்றொரு சரக்கு ரயில் சென்று நேருக்கு நேர் மோதியதாகத் தெரிகிறது. தொடர்ந்து இரு ரயில்களிலும் அடுத்தடுத்து 12 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், என்ஜின்கள் இரண்டும் கடும் சேதமடைந்தன.

பொருட்கள் ஏதுமற்று சரக்கு ரயில்கள் விபத்துக்குள்ளான இந்நிகழ்வில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ஒரு ரயிலின் ஓட்டுநகர் காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து மித்னாபூர், பாங்குரா, புருலியா உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவ இடத்தை அடைந்த போலிஸார், விபத்துக்கான தெளிவான காரணம் தொடர்பாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஒடிசாவின் பாலசோரில் மேற்குவங்க ரயில் உட்பட 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories