இந்தியா

கருவுக்குள் கரு.. 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை சிசு வைத்திருந்த ஆண்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

36 வருடங்களாக ஆண் ஒருவர் வயிற்றில் இரட்டை சிசு இருந்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருவுக்குள் கரு.. 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை சிசு வைத்திருந்த ஆண்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத். இவருக்கு சிறு வயதில் வயிறு பகுதி சாதரண குழந்தைகளுக்கு இருப்பது போல் இருந்துள்ளது. ஆனால் வளர வளர இவருக்கு வயிறும் பெரிதாக மாறி வந்துள்ளது. இதனால் அவருக்கு தொப்பை ஏற்பட்டதாக நினைத்து அவரும், அவரது குடும்பத்தாரும் சாதாரணமாக விட்டுள்ளனர்.

அவரது வயிறு பெரிதாக இருப்பதால், அவர் கர்ப்பிணியாக இருப்பதாவும், அவரது வயிற்றுக்குள் குழந்தை இருப்பதாகவும் அவருடன் படித்த சக மாணவர்கள் கிண்டலடித்து வந்துள்ளனர். இருப்பினும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்த சூழலில் சுமார் 35 வருடங்கள் கழித்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

கருவுக்குள் கரு.. 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை சிசு வைத்திருந்த ஆண்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

இதனால் 1999-ம் ஆண்டு அவர் மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையை அணுகினார். அங்கே அவருக்கு பலகட்ட சோதனைகள் செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் ஏதோ கட்டி இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவரது வயிற்றுக்குள் கட்டி போல் இருப்பதாக எண்ணிய மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின்போது அவரது வயிற்றுக்குள் பார்த்தபோது, கை, கால்கள், பிறப்பு உறுப்பு, முடிகளுடன் 2 சிசு இருந்துள்ளது தெரியவந்தது. அதுவும் Fetus in fetu என்று சொல்லப்படும் கருவுக்குள் கரு என்ற அறியவகையில் அந்த சிசுக்கள் இருந்துள்ளது.

கருவுக்குள் கரு.. 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை சிசு வைத்திருந்த ஆண்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

பின்னர் அதனை அறுவை சிகிக்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். இந்த சிசுக்களை சஞ்சு பார்க்க கூட மறுத்துவிட்டார். எனினும் ஒரு ஆண் வயிற்றுக்குள் இப்படி இரட்டை சிசு இருந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வு மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டுக்கு முன்னாள் வந்த இந்த செய்தி, 2020-ம் ஆண்டு மீண்டும் வைரலானது. தொடர்ந்து தற்போதும் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories