இந்தியா

நேருக்கு நேர் மோதிய கார் - லாரி.. அப்பளமாக நொறுங்கிய கார்.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பரிதாப பலி !

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கார் - லாரி மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

நேருக்கு நேர் மோதிய கார் - லாரி.. அப்பளமாக நொறுங்கிய கார்.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பரிதாப பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும், தமிழ்நாட்டில் இருந்து குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியும் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர் எதிரே வந்த இந்த இரண்டு வாகனங்களும் நேருக்கு நேரு அதிவேகத்தில் மோதிக்கொண்டது. இந்த சம்பவம் கல்கேரி கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேருக்கு நேர் மோதிய கார் - லாரி.. அப்பளமாக நொறுங்கிய கார்.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பரிதாப பலி !

இது குறித்து அந்த பகுதியில் சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் கிரேன் மூலம் காரை அகற்றி, உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories