இந்தியா

“என் பொண்ணு அவனை அண்ணன்னு கூப்புடுவா.. ஆனா அவனோ..” -6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பக்கத்து கடைக்காரர்!

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்துக்கு கடைக்காரரின் செயல் ஜார்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என் பொண்ணு அவனை அண்ணன்னு கூப்புடுவா.. ஆனா அவனோ..” -6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பக்கத்து கடைக்காரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் சாஸ் என்ற பகுதி உள்ளது. இங்கு அசோக் ஜன்ஜாரியா (37) என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், பக்கத்து வீட்டு பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார். அந்த பெண்ணுக்கு 6 வயதில் சிறுமி ஒருவர் இருக்கிறார்.

இதனால் அசோக், அந்த சிறுமியுடன் விளையாடி மகிழ்வார். அது போல் சிறுமியின் குடும்பத்தோடும் அசோக்கிற்கு நல்ல பழக்கம் இருந்துள்ளது. சுமார் 5 ஆண்டுகளாக அசோக், சிறுமியின் குடும்பத்தோடு பழகி வந்துள்ளார். எனவே சிறுமியும் அசோக்கின் கடைக்கு சென்று தனக்கு தேவையான தின்பண்டம் எடுத்து சாப்பிடுவார்.

“என் பொண்ணு அவனை அண்ணன்னு கூப்புடுவா.. ஆனா அவனோ..” -6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பக்கத்து கடைக்காரர்!

மேலும் அவரது பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் சிறுமி சேர்ந்து விளையாடுவர். தற்போது விடுமுறை என்பதால் சிறுமியும் தினமும் விளையாடி வந்துள்ளார். சிறுமியை விளையாட விட்டுவிட்டு தாயும் தனது வேலையை பார்க்க சென்று விடுவார். இந்த சூழலில் நேற்று கடைக்கு மேல் தளத்தில் சக சிறுவர்களுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

பின்னர் விளையாடி விட்டு அனைவரும் வீடு திரும்பி விட்டதால் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அசோக், சிறுமியிடம் நேக்காக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியை மாடியில் மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வலி தாங்க முடியாத சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

“என் பொண்ணு அவனை அண்ணன்னு கூப்புடுவா.. ஆனா அவனோ..” -6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பக்கத்து கடைக்காரர்!

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தாய் சத்தம் கொடுத்து கொண்டே வந்துள்ளார். இதனால் அசோக் அந்த இடத்தை விட்டு தப்பியோடினார். பின்னர் இரத்த போக்குடன் கிடந்த சிறுமியை வந்து பார்த்த தாய் கதறி அழுதார். என்ன நடந்தது என்று கேட்கும்போது நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு, அசோக் குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்து.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றாவளி அசோக்கை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 வயது சிறுமியை பக்கத்துக்கு கடைக்காரரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஜார்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories