இந்தியா

மருமகளை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பியால் சூடு.. மாமியார் செய்த கொடூரம்.. ம.பியில் அதிர்ச்சி - பின்னணி?

வரதட்சணை கேட்டு மாமியாரே தனது மருமகளை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பியால் அந்தரங்க பகுதியில் சூடு வைத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருமகளை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பியால் சூடு.. மாமியார் செய்த கொடூரம்.. ம.பியில் அதிர்ச்சி - பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விதிஷா (Vidisha) என்ற கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு அவரது குடும்பத்தார் வரண் தேடி வந்தனர். அப்போது சுகி செவானியா (Sukhi Sewania) என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் குடும்பம் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவருக்கும், அந்த இளம்பெண்ணுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த சூழலில் திருமணமாகி சில வாரங்களிலேயே கணவரின் குடும்பம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளது. தொடர்ந்து மருமகளுக்கும் மாமியாருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு மருமகளை அவரது பெற்றோர் வீட்டுக்கு துரத்தி விடுவர்.

மருமகளை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பியால் சூடு.. மாமியார் செய்த கொடூரம்.. ம.பியில் அதிர்ச்சி - பின்னணி?

தொடர்ந்து மாமியார் மட்டுமின்றி, கணவருடனும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தாயுடன் சேர்ந்து அவரும் இந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் பெண் வீட்டார் அவர்களை சமரசம் செய்துவைத்து மீண்டும் கணவர் வீட்டில் கொண்டுவந்து விட்டு செல்வர்.

மருமகளை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பியால் சூடு.. மாமியார் செய்த கொடூரம்.. ம.பியில் அதிர்ச்சி - பின்னணி?

இந்த சூழலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறியாத கணவரோ பதற்றமடைந்த தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் தான் அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றிருப்பதை அறிந்த மாமியார், மைத்துனர் அவரிடம் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

மருமகளை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பியால் சூடு.. மாமியார் செய்த கொடூரம்.. ம.பியில் அதிர்ச்சி - பின்னணி?

வீட்டிற்கு பிறகு, கணவனும் மாமியாரும் சேர்ந்து அந்த பெண்ணை தனி அறையில் நிர்வாணப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர். மேலும் ஒரு இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி பெண்ணின் வீட்டிற்கு உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்துள்ளார். அவரது சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அறையை திறந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பெண்ணை கொடுமை செய்த கணவர், மாமியார், மைத்துனர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories