இந்தியா

15 நாட்களில் ஒருவர் என்கவுண்டர்.. உ.பி பாஜக ஆட்சியில் 6 ஆண்டில் 186 பேர் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்!

ஆண்டுகளில் 186 பேர் என்கவுண்டர்கள் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

15  நாட்களில் ஒருவர் என்கவுண்டர்.. உ.பி பாஜக ஆட்சியில் 6 ஆண்டில் 186 பேர் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மேலும் 2017ம் ஆண்டு முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இருந்து பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறது.

அதேபோல் கொலை மற்றும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அண்மையில் கூட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

15  நாட்களில் ஒருவர் என்கவுண்டர்.. உ.பி பாஜக ஆட்சியில் 6 ஆண்டில் 186 பேர் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் தலைவிரித்தாடும் மாஃபியாக்களை பா.ஜ.க கட்டுப்படுத்தியுள்ளது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியிருந்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 186 பேர் என்கவுண்டர் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இதுவரை சராசரியாக 15 நாட்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. மீரட் மாவட்டத்தில் 65 பேரும், வாரனாசியில் 20 பேரும், ஆக்ராவில் 14 பேரும், லக்னோவில் 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு மட்டும் 41 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு 34 பேர். இந்த ஆண்டு இதுவரை 17 என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories