இந்தியா

ஆபாச வீடியோ கால்.. 75 வயது முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறிமுதல் செய்த கும்பல்: விசாரணையில் பகீர்!

டெல்லியில் ஆபாச வீடியோ கால் மூலம் முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ கால்.. 75 வயது முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம்  பறிமுதல் செய்த கும்பல்: விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியைச் சேர்ந்தவர் கே.என்.ஜோஷி. 75 வயது முதியவரான இவரது செல்போனுக்கு கடந்த ஜனவரி மாதம் அஞ்சலி சர்மா என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர் நிர்வாணமாக வீடியோ கால் செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த இணைப்பைத் துண்டித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்திலேயே போன் செய்து ரூ.61,000 கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதியவர் ஜோஷி அவரது எண்ணை பிளாக் செய்துள்ளார்.

ஆபாச வீடியோ கால்.. 75 வயது முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம்  பறிமுதல் செய்த கும்பல்: விசாரணையில் பகீர்!

பிறகு சில நாட்கள் கழித்து டெல்லி போலிஸ் ஆணையர் ராகேஷ் அஸ்தானா பேசுவதாகக் கூறி முதியவரை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அஞ்சலி சர்மாவுடனா ஆபாச வீடியோ பற்றிய தகவல் கிடைத்துள்ளது என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் இருந்து நீக்குவதாகக் கூறி ரூ.64,500 கேட்டுப் பெற்றுள்ளார்.

மேலும் வழக்கிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். இப்படித் தொடர்ந்து முதியவரை மிரட்டி பணத்தைப் பறிமுதல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆபாச வீடியோ கால்.. 75 வயது முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம்  பறிமுதல் செய்த கும்பல்: விசாரணையில் பகீர்!

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மோசடி கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாச வீடியோ கால் மூலம் முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என போலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories