இந்தியா

டெல்லி அதிகாரம் .. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இரவோடு இரவாக அவசர சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசு!

டெல்லியின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் அவசரச் சட்டத்தை இரவோடு இரவாக ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறது

டெல்லி அதிகாரம் .. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இரவோடு இரவாக அவசர சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்தே டெல்லி அரசின் முடிவுகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

மேலும் 2019ம் ஆண்டு டெல்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என நீதிபதி பூசன் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து ஒன்றிய அரசின் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

டெல்லி அதிகாரம் .. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இரவோடு இரவாக அவசர சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசு!

இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அண்மையில் வழங்கி இருந்தனர். நீதிபதிகளின் தீர்ப்பில்,"2019ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சட்டப்பேரவைகளில் சட்டம் நிறைவேற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சியின்படியே இயங்குகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம். ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களில் மட்டுமே ஒன்றிய அரசு தலையிடும் அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவைச் செயல்படுத்துவதைத் தடுத்தால் கூட்டுப் பொறுப்பு பாதிக்கப்படும்.

டெல்லி அதிகாரம் .. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இரவோடு இரவாக அவசர சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசு!

சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ள சில அம்சங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் அவசரச் சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசமன்றத்துக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், 'எந்த சட்டமன்றமும் நீதிமன்றமும் உத்தரவும் மாற்ற முடியாது' என்கிற ஷரத்தோடு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து ஒன்றிய அரசு அழிச்சாட்டியம் செய்துள்ளது

banner

Related Stories

Related Stories