இந்தியா

சொகுசு TV, 20 சொகுசு CAR, பங்களா.. மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியரிடம் ரூ.7 கோடிக்கு சொத்து !

மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஒப்பந்த ஊழியரிடம் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்து முறைகேடாக இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு TV, 20 சொகுசு CAR, பங்களா.. மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியரிடம் ரூ.7 கோடிக்கு சொத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஹேமா மீனா. 34 வயது இளம்பெண்ணான இவர், அம்மாநிலத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். அங்கே உதவி இன்ஜினியராக வேலை கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவருக்கு மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் ஆகும்.

இந்த சூழலில் ஹேமா மீனா தனது வருமானத்துக்கும் அதிகமான சொத்துகள் சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதன்பேரில் மத்திய பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் ஹேமா மீனாவுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஹேமா மீனாவுக்கு சொந்தமான 3 இடங்களில் நடத்திய சோதனையில் அவர் சுமார் ரூ.7 கோடிக்கும் மேலாக முறைகேடாக சொத்துகள் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது.

சொகுசு TV, 20 சொகுசு CAR, பங்களா.. மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியரிடம் ரூ.7 கோடிக்கு சொத்து !

அதில் அவரது வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள டிவி, அவரது பிரம்மாண்ட வீட்டில் 20 சொகுசு கார்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டது. மேலும் அவரது சொகுசு பண்ணையில் கிர் வகை பசுக்கள் உட்பட சுமார் 70 - 80 பசுக்கள் இருந்துள்ளது. மேலும் அவர் தங்கியிருந்த வீடானது சுமார் 20 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டு இருந்தது. சுமார் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அவரது வீடு, அவரது தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சொகுசு TV, 20 சொகுசு CAR, பங்களா.. மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியரிடம் ரூ.7 கோடிக்கு சொத்து !

அதுமட்டுமின்றி அவரது வீட்டில் 30 நாட்டு நாய்கள் உள்பட 65 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. வீட்டு ஊழியர்களுடன் அவர் வாக்கி டாக்கியில் பேசி வந்தது தெரிய வந்தது. அங்கு ஜாமர் ஒன்றும் வீட்டு சுவரில் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் ரூ.10 லட்சம் நகைகள், ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம்,ரெய்சன், விதிஷா மாவட்டங்களில் நிலம் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் என அனைத்தும் ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

சொகுசு TV, 20 சொகுசு CAR, பங்களா.. மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியரிடம் ரூ.7 கோடிக்கு சொத்து !

இதையடுத்து இதை முழுவதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதற்கு விளக்கம் கேட்டு ஹேமா மீனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை ஹேமா மீனாஅளிக்கவில்லை என்றால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லோக்ஆயுக்தா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஒப்பந்த ஊழியரிடம் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்து முறைகேடாக இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories