இந்தியா

தென் இந்தியாவில் பா.ஜ.கவிற்கு NO.. ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்த பா.ஜ.க!

கர்நாடகாவில் ஆட்சியை இழந்த நிலையில் தென் இந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழக்கிறது.

தென் இந்தியாவில் பா.ஜ.கவிற்கு NO.. ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்த பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 131 இடங்களிலும், பா.ஜ.க 66 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 131 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.

தென் இந்தியாவில் பா.ஜ.கவிற்கு NO.. ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்த பா.ஜ.க!

இந்த தேர்தல் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாகப் பிரதமர் மோடி 40 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பேரணியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.

இருப்பினும் 40% ஊழல், கிஜாப் தடை, இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து மற்றும் மதபிரிவினை போன்ற பா.ஜ.கவின் அரசியலை இந்த தேர்தலில் கர்நாடக மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். மேலும் இந்த தேர்தலில் அதிகமான இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.க அமைச்சர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.

தென் இந்தியாவில் பா.ஜ.கவிற்கு NO.. ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்த பா.ஜ.க!

இந்நிலையில் கர்நாடகத்தில் ஆட்சியை இழந்துள்ளதால் தென்னிந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழந்துள்ளது. தென் மாநிலங்களில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க தலைவர்கள் கூறிய நிலையில் தற்போது தென் மாநிலத்தில் பா.ஜ.க முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சியில் உள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் ஆட்சியில் உள்ளது. தெலங்கானாவில் சந்திரசகேர் ராவ் தலைமையிலான பாரதி இராட்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. அதேபோல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது. இதன் மூலம் தென் மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க ஆட்சியில் இல்லை.

banner

Related Stories

Related Stories