இந்தியா

இப்படி ஒரு சிக்கலா.. கணவனை காட்டிக் கொடுத்த Traffic Camera: கேரளாவில் நடந்தது என்ன?

கேரளாவில் வேறொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரைப் புகைப்படம் எடுத்த போக்குவரத்து சிக்னல் கேமரா அதை அவரது மனைவிக்கு அனுப்பியதால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

இப்படி ஒரு சிக்கலா.. கணவனை காட்டிக் கொடுத்த Traffic Camera: கேரளாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல்களில் கேமராவை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் விதிகளை மீறுபவர்களைப் புகைப்படம் அடுத்து அதை அவர்களுக்கு அனுப்பி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டம், கரமன பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 25ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் பெண் ஒருவர் பயணித்துள்ளார். இருசக்கர வாகனத்தை ஓட்டி அந்த நபர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போக்குவரத்து சிக்னல் கேமராவில் சிக்கியுள்ளார்.

இப்படி ஒரு சிக்கலா.. கணவனை காட்டிக் கொடுத்த Traffic Camera: கேரளாவில் நடந்தது என்ன?

அவரை துல்லியமாக்கப் படம் எடுத்து இந்த வாகனத்தின் உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு அபராதம் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்டது. இந்த படத்தைப் பார்த்த அந்த நபரின் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து தனது கணவனிடம் வாகனத்தில் அழைத்து சென்ற பெண் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அவர் அந்த பெண் லிப்ட் கேட்டு வந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை அவர் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒரு சிக்கலா.. கணவனை காட்டிக் கொடுத்த Traffic Camera: கேரளாவில் நடந்தது என்ன?

அப்போது மனைவி மற்றும் 3 வயதுக் குழந்தையைத் தாக்கியுள்ளார். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் கணவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories