இந்தியா

22 பேர் பலி.. சோகத்தில் மூழ்கிய கேரளா: ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கும் மக்கள்!

கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

22 பேர் பலி.. சோகத்தில் மூழ்கிய கேரளா: ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தானூர் பகுதியில் உள்ள கடலில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர்.

இதனால், படகில் முறைகேடாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு படகில் 50க்கும் மேற்பட்டோர் ஏற்றி செல்லப்பட்டுள்ளனர். இந்தப் படகு திடீரென கவிழ்ந்துள்ளது. இதில் படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கியுள்ளனர்.

22 பேர் பலி.. சோகத்தில் மூழ்கிய கேரளா: ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கும் மக்கள்!

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை 22 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிலர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

22 பேர் பலி.. சோகத்தில் மூழ்கிய கேரளா: ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கும் மக்கள்!

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மேலும் இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories