இந்தியா

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் பெண்.. குத்தி கொலை செய்த மாமா: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை அவரது மாமா கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த  இளம் பெண்..  குத்தி கொலை செய்த மாமா: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பஜ்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் புடான் சிங் தோமன். இவரது 20 வயது மகள் இதே கிராமத்தைச் சேர்ந்த ரூப் சந்திர மவுரியா என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். இவருக்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறிக் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் புடான் சிங் தோமன் குடும்பத்தினர் மகள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த  இளம் பெண்..  குத்தி கொலை செய்த மாமா: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

இந்நிலையில், இருவரும் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பி வந்துள்ளனர். இதையடுத்து தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்ய அவரது மாமா திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி அவரது வீட்டிற்குச் சென்று இளம் பெண்ணை வெளியே இழுத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு அவரது மகனும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து ரூப் சந்திராவின் குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த  இளம் பெண்..  குத்தி கொலை செய்த மாமா: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

இந்த புகாரை அடுத்து இளம் பெண்ணை கொலை செய்த மாமா மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறுசமூகத்தைச் சேர்ந்த வாலிபரைத் திருமணம் செய்து கொண்டதால் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories