இந்தியா

”சீனாவின் ஏஜென்ட் காங்கிரஸ்” .. பா.ஜ.க MLA பேச்சு : கர்நாடக தேர்தலில் முற்றும் வார்த்தை போர்!

சோனியா காந்தி ஒரு விஷப் பெண் என பா.ஜ.க எம்.எல்.ஏ பேசிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”சீனாவின் ஏஜென்ட் காங்கிரஸ்” .. பா.ஜ.க MLA பேச்சு :  கர்நாடக தேர்தலில் முற்றும் வார்த்தை போர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என பேசியதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

”சீனாவின் ஏஜென்ட் காங்கிரஸ்” .. பா.ஜ.க MLA பேச்சு :  கர்நாடக தேர்தலில் முற்றும் வார்த்தை போர்!

இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி ஒரு விஷப் பெண் என பா.ஜ.க எம்எல்ஏ பசனகவுடபேசியுள்ளார். கொப்பலில் நடந்த பேரணியின் போது, "உலகமே பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்தது. பின்னர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து அமெரிக்கா வரவேற்றது. இப்போது காங்கிரஸ் பிரதமரை விஷப் பாப்பு என்று சொல்கிறார்கள். சோனியா காந்திதான் ஒரு விஷப் பெண். சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பா.ஜ.க கட்சிக்கு இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது.

banner

Related Stories

Related Stories