இந்தியா

”ஊழல் பணத்தை கொண்டு கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க சதி” : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஊழல் பணத்தை வைத்து கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

”ஊழல் பணத்தை கொண்டு கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க சதி” : காங்கிரஸ் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். இது பா.ஜ.கவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

”ஊழல் பணத்தை கொண்டு கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க சதி” : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இதையடுத்து தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. அண்மையில்கூட கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளராக இருக்கும் தமிழ்நாடு பா,ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்திருந்தார். அப்போது அவர் கட்டுகட்காகப் பணம் மூட்டையை கொண்டுவந்ததாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

”ஊழல் பணத்தை கொண்டு கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க சதி” : காங்கிரஸ் குற்றச்சாட்டு!
ANI

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "பெங்களூருவில் அதிகாரிகள் வீட்டில் லோக் அயுக்தா போலிஸார் நடத்திய சோதனையில் பணம், சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது ஊழலைக் காட்டுவதாக உள்ளது.

பா.ஜ.க ஆட்சியின் ஊழலாக கர்நாடகா மாநிலத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டார்கள். இதனால் ஊழலில் கொள்ளையடித்த பணத்தைக் கொண்ட ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories