இந்தியா

"உங்களின் ஒரு ஓட்டு கூட எங்களுக்கு தேவையில்லை".. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை கொட்டிய BJP தலைவர்!

இஸ்லாமியர்களிடம் இருந்து ஒரு ஓட்டு கூட தேவையில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"உங்களின் ஒரு ஓட்டு கூட எங்களுக்கு தேவையில்லை".. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை கொட்டிய BJP தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இஸ்லாமியர்களிடம் இருந்து ஒரு ஓட்டு கூட தேவையில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"உங்களின் ஒரு ஓட்டு கூட எங்களுக்கு தேவையில்லை".. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை கொட்டிய BJP தலைவர்!

நேற்று கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஈஸ்வரப்பா, "சாதி பிரச்சினைகளை முன்வைத்துத் தேர்தலில் போராடுபவர்களுக்கு நாம் தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், நம்மைப் பிரிக்க முடியாது என்பதைக் காட்ட வேண்டும்.

சிவமொக்கா தொகுதியில் 50,000 முதல் 55,000 இஸ்லாமியர்கள் ஓட்டு உள்ளதாகக் காங்கிரஸ் கூறுகிறார்கள். நான் நேரடியாகவே சொல்கிறேன் நமக்கு ஒரு இஸ்லாமியர்கள் ஓட்டு கூட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இஸ்லாமிய மக்கள் மீதா வெறுப்பைக் காட்டுவதாகவே உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories