இந்தியா

ஒரு சேலைக்காக மல்லுக்கட்டிக் கொண்ட 2 பெண்கள்.. குழாயடி சண்டையாக மாறிய ஜவுளிக்கடை!

பெங்களூருவில் ஜவுளிக்கடை ஒன்றில் இரண்டு பெண்கள் ஒரே சேலைக்காக சண்டைபோட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சேலைக்காக மல்லுக்கட்டிக் கொண்ட 2 பெண்கள்.. குழாயடி சண்டையாக மாறிய ஜவுளிக்கடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மைசூர் சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு குறைந்த விலையில் சேலைகள் விற்பனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளிக் கடையில் பெண்கள் அதிகமாகக் கூடியுள்ளனர். அப்போது இரண்டு பெண்களும் ஒரே சேலையை எடுத்துப் பார்த்துள்ளனர்.

அந்த சேலை இரண்டு பேருக்கும் பிடித்துப்போனதால் இருவருக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி தங்களைத் தாக்கிக் கொண்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் இருவரையும் தடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை வைத்யா என்ற ட்விட்டர் பயனாளர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் வீடியோவை பார்த்த பலரும் பலவிதமாகக் கேலி செய்து வருகின்றனர்.

ஒரு சேலைக்காக மல்லுக்கட்டிக் கொண்ட 2 பெண்கள்.. குழாயடி சண்டையாக மாறிய ஜவுளிக்கடை!

ஒரு பயனாளர் "என்ன நடக்கிறது என்று பார்க்கத் தலையைக் கூட திருப்பாமல் ஷாப்பிங் செய்பவர்களை நான் விரும்புகிறேன் என்றும் மற்றொருவர் "சேலை என்பது வெறும் ஆடை அல்ல, அது ஒரு உணர்வு" கேலி செய்துள்ளனர். இப்படி பலரும் பல்வேறு விதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories