இந்தியா

டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பா.ஜ.க பெண் நிர்வாகி!

தெலங்கானாவில் சாலை விபத்தில் பா.ஜ.க பெண் நிர்வாகி நீரஜா ரெட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பா.ஜ.க பெண் நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், கர்னூல் பா.ஜ.க மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் நீரஜா ரெட்டி. இவர் ஆலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் கர்னூரில் இருந்து ஹைதராபாத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவரது கார் பீச்சுபள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்துள்ளது.

டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பா.ஜ.க பெண் நிர்வாகி!

இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் கலந்த காயத்துடன் இருந்த நீரஜா ரெட்டி மற்றும் கார் ஓட்டுநரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர்.

அங்குச் சிகிச்சை பலனின்றி நீரஜா ரெட்டி உயிரிழந்துள்ளார். கார் ஓட்டுநருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பா.ஜ.க பெண் நிர்வாகி!

இதையடுத்து உயிரிழந்த நீரஜா ரெட்டிக்கு பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த நீரஜார ரெட்டி, 2009 முதல் 2014ம் ஆண்டுவரை அலுரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக பணியாற்றினார். இதற்கு முன்பு பட்டிகொண்ட தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

பின்னர்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2009ம் ஆண்டு அலுரு தொகுதியில் போட்டிப்போட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில்தான் நீரஜா ரெட்டி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories