இந்தியா

“எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

“எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு போஸ்டர் ஒட்டுவது வழக்கம். திருமணம், கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள், திரைப்படம், பொதுக்கூட்டம் என பல நிகழ்வுகளுக்கு போஸ்டர் ஒட்டு விளம்பர படுத்தப்படும். அதில் முக்கியமானதாக கருதப்படுவது அரசியல் கட்சிகள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி விளம்பரம் படுத்துவது வழக்கம்.

மேலும் இது போல் போஸ்டர் ஒட்டுவதால் சாலையோரம் இருக்கும் விலங்குகள் அந்த போஸ்டரை கிழித்து சாப்பிடும். நாம் அடிக்கடி பார்த்திருப்போம், சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஏதேனும் போஸ்டரை மாடு உள்ளிட்ட விலங்குகள் கடித்து சாப்பிடும். ஆனால் இதுவரையிலும் யாரும் அந்த விலங்குகள் மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை.

“எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!

வழக்கம்போல் இதனை கண்டாலும் பார்க்கதவாறு மக்கள் செல்வர். தற்போதும் அது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் போஸ்டரை கிழித்த பிராணி மீது, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

“எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!

ஆந்திர மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்த ஆண்டு (2024) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால் அங்கு தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் YSR காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே இருக்கும் கடைகள், வீடுகள் உள்ளிட்ட சுவர்களில் அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அங்குள்ள ஸ்ரீகாகுளம் நகர் என்ற பகுதியில் ஜெகன் மோகனின் உருவம் பதிந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த ஸ்டிக்கரை நாய் ஒன்று தனது வாயால் கிழித்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்திலும் சேர்ந்தது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் நாய்க்கும், அதன் நிர்வாகிக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!

கண்டனம் மட்டும் போதாமல், அந்த நாய் மீது விஜயவாடாவில் உள்ள YSR காங்கிரஸ் பெண் தொண்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மாநில முதலமைச்சரை அவமதித்ததாகக் கூறி, ஸ்டிக்கரை கிழித்த நாயையும் அதன் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய் மீது அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயலை பொதுமக்களும் இணையவாசிகளும் கிண்டலடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories