இந்தியா

ஒரு புலியை கூட பார்க்காமல் வீடு திரும்பிய மோடி.. வனத்துறை ஊழியர் மீது பழிபோடும் PM பாதுகாப்புக் குழு!

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி சென்றபோது அவர் புலிகளைப் பார்க்காததால் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு புலியை கூட பார்க்காமல் வீடு திரும்பிய மோடி.. வனத்துறை ஊழியர் மீது பழிபோடும் PM பாதுகாப்புக் குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் அழிந்து வரும் புலிகளைப் பாதுகாக்கும் பொருட்டு 1973ம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து புலிகள் காப்பகங்கள் அமைத்து புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் 50 ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.

ஒரு புலியை கூட பார்க்காமல் வீடு திரும்பிய மோடி.. வனத்துறை ஊழியர் மீது பழிபோடும் PM பாதுகாப்புக் குழு!
ஒரு புலியை கூட பார்க்காமல் வீடு திரும்பிய மோடி.. வனத்துறை ஊழியர் மீது பழிபோடும் PM பாதுகாப்புக் குழு!

அங்கு 2 மணி நேரம் திறந்த வெளி ஜீப்பில் சென்று பறவைகள் மற்றும் விலங்குகளைக் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தார். இது குறித்து தனது ட்விட்டரிலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 22 கிலோ மீட்டர் தூரம் சென்றும் அவர் ஒரு புலியைக் கூட பார்க்கவில்லை. இதனால் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வேறு வழியில் கூட்டிச் செல்ல முடியுமா? என கூறியுள்ளனர். இதற்கு அவர் பிரதமரின் பாதுகாப்பு கருதி மறுப்பு தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து பந்திப்பூர் புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடியை வாகனத்தில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் மதுசூதனன் என்பவர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து பந்திப்பூர் புலிகள் சரணாலய அதிகாரிகள் கூறுகையில், பிரதமர் மோடியின் வருகைக்கு ஐந்து நாட்கள் முன்பே பிரதமரின் பாதுகாப்புக்குழு, சிறப்புப் பாதுகாப்புக்குழு, உள்ளூர் போலிஸார் அடங்கிய ஒரு குழு பிரதமர் மோடி செல்லும் பாதையை ஆய்வு செய்தது.

அப்போது இந்த குழு புலிகளைப் பார்த்துள்ளனர். இதனடிப்படையில் தான் பிரதமருக்கு இந்த வழி தேர்வு செய்யப்பட்டது. மேலும் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் தேர்வு செய்யப்பட்ட வழியில்தான் பிரதமரைக் கூட்டிச் சென்றார். இதனால் அவர்மீது பழிபோட முடியாது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories