இந்தியா

”இந்தியாவிற்காக நான் பேசுவதை பா.ஜ.கவால் ஒருபோதும் தடுக்கமுடியாது”.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

நான் பேசுவதை பா.ஜ.கவால் தடுக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

”இந்தியாவிற்காக நான் பேசுவதை பா.ஜ.கவால் ஒருபோதும் தடுக்கமுடியாது”.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று ராகுல் காந்தி சென்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் திறந்த வாகனத்தில் பேரணியாகச் சென்றவர்களுக்குக் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

”இந்தியாவிற்காக நான் பேசுவதை பா.ஜ.கவால் ஒருபோதும் தடுக்கமுடியாது”.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எம்.பி என்பது வெறும் பதவி மட்டும்தான். பா.ஜ.க எம்.பி பதவி மற்றும் வீட்டை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் வயநாடு மக்களைச் சந்திக்க வருவதை யாராலும் தடுக்கமுடியாது. நான் பேசுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

நான் பல ஆண்டுகளாக பா.ஜ.கவுடன் போராடி வருகிறேன். இத்தனை வருடங்களாக அவர்களால் எதிராளியைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எதிராளி பயப்பட மாட்டார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

”இந்தியாவிற்காக நான் பேசுவதை பா.ஜ.கவால் ஒருபோதும் தடுக்கமுடியாது”.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

என் வீட்டிற்கு போலிஸை அனுப்பிப் பயமுறுத்துவார்கள் என்று நினைக்கிறார்கள். எம்.பி பதவி, என் வீட்டைப் பிடுங்கினால் நான் பயந்துவிடுவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 50 முறை எனது வீட்டைப் பறித்துக் கொள்ளுங்கள் எனக்குக் கவலையில்லை. இந்தியா மற்றும் வயநாடு மக்களின் பிரச்சினைகளை நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories