இந்தியா

நந்தினியை (KMF) கொள்ளையடிக்கத்தான் கர்நாடகா வந்தீங்களா?.. மோடியை கடுமையாக விமர்சித்த சித்தராமையா!

நீங்கள் கர்நாடகாவிற்கு கொள்ளையடிக்கத்தான் வந்திங்களா என முன்னாள் முதல்வர் சித்தராமையா பிரமர் மோடியை விமர்சித்துள்ளார்.

நந்தினியை (KMF) கொள்ளையடிக்கத்தான் கர்நாடகா வந்தீங்களா?..  மோடியை கடுமையாக விமர்சித்த சித்தராமையா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என தேர்தலுக்கு முந்தை சில கருத்துக் கணிப்புகள் கூறிவருவதால் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அமித்ஷா முதல் ஒன்றிய அமைச்சர்கள் பலரும் கர்நாடகாவில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நந்தினியை (KMF) கொள்ளையடிக்கத்தான் கர்நாடகா வந்தீங்களா?..  மோடியை கடுமையாக விமர்சித்த சித்தராமையா!

இந்நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு (KMF) நந்தினி பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது (தமிழ்நாட்டில் ஆவின் இருப்பதுபோல் கர்நாடகாவில் நந்தினி பால் உள்ளது) . இதற்குக் காரணம் KMFம் அமல் நிறுவனத்தையும் பா.ஜ.க இணைக்க முடிவு செய்துள்ளதுதான்.

இதனை உறுதி செய்யும் வகையில் ஜனவரிமாவதம் கர்நாடகா வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் இங்குள்ள நந்தினியுடன் இணைந்து பணியாற்றினால் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் முதன்மைபெறும் என பேசியுள்ளார்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சுக்கு கர்நாடகவில் பெரும் எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்நாடக பால் வியாபாரிகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் #SaveNandini என்ற ஹேஸ்டாக் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பா.ஜ.கவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார். இது குறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் கர்நாடகா வந்ததன் நோக்கம் கர்நாடகாவுக்கு கொடுப்பதா அல்லது கர்நாடகாவில் இருந்து கொள்ளையடிப்பதா?

நீங்கள் ஏற்கனவே கன்னடர்களிடமிருந்து வங்கிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைத் திருடிவிட்டீர்கள். நீங்கள் இப்போது நந்தினியை (KMF) எங்களிடமிருந்து திருட முயற்சிக்கிறீர்களா?" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories