இந்தியா

ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரயில்வே ஊழியரை கைது செய்ய வைத்த ஒரு ட்வீட்!

ஓடும் ரயிலில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரயில்வே ஊழியரை கைது செய்ய வைத்த ஒரு ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ராணிகேத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெய்சால்மருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே பயிற்சியாளர் ஸ்ரீ பெங்காலி குப்தா என்பவர் இத்தாலி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிறகு அந்த பெண் அவரது பிடியிலிருந்து தப்பித்து கழிவறையில் மறைந்து கொண்டுள்ளார்.

ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரயில்வே ஊழியரை கைது செய்ய வைத்த ஒரு ட்வீட்!

பிறகு தனது இந்திய நண்பரை தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு அவர் ரயிலின் விவரங்களை கேட்டு ரயில்வே அமைச்சகத்தின் ட்வீட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதைப்பார்த்த ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரிகள் உடனே சம்மந்தப்பட்ட ரயில்வே போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பிறகு ராணிகேத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பலோடி என்ற ரயில்நிலையத்திற்கு வந்த போது அங்கு இருந்த ஆர்பிஎப் மற்றும் ஆர்பிஐ அதிகாரிகள் ரயில்வே பயிற்சியாளர் பெங்காலி குப்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரயில்வே ஊழியரை கைது செய்ய வைத்த ஒரு ட்வீட்!

இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆறுமாதம் தடை விதித்துள்ளது. இத்தாலி பெண் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நண்பர் ட்வீட்டரில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்காலி குப்தாவை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூகவலைதளங்கள் தீய செயலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இதுபோன்று பலரை காப்பாற்றவும் உதவுகிறது என்பது இந்த சம்பவம் நமக்கு தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

banner

Related Stories

Related Stories